Friday, October 10, 2008

பங்கு வர்த்தகம்

இங்கே ஒரு நல்ல ப்லோக்.

பங்கு வர்த்தகம் இந்தியாவில் ஒரு மாயை.

தயிரியம் உள்ளவர்கள் தான் விளையாட (?) வேண்டும்.

என் நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு வீடு வாங்குங்கள் முதலில். வாடகை மாதிரி அதற்க்கு கட்டுங்கள். கொஞ்சம் தங்கம் வருடம் ஒரு முறை வாங்குங்கள். அப்புறம் மிச்சம் இருந்தால், பாதி
ஸ்டாக் மார்க்கெட் பாதி பிக்ஸ்ச்ட் டெபாசிட்.

என்னை பொறுத்த வரை, இடமும் தங்கமும் வாங்கலாம். ஒரு பகுதி ஸ்டாக் மார்க்கெட்.

பணம் பண்ண சில வழிகள் உள்ளன.

இந்தியாவில் மொத சேமிப்பு 24% அதில் 3% மட்டும் தான் ஸ்டாக் மார்க்கெட்டில் போகிறது. எல்லாம் வெளி நாட்டு பணம் தான் வருகிறது. அதுதான் ப்ரோப்ளம். அவர்கள் தும்மினால், நமக்கு காய்ச்சல்.

அளவோடு ஆசை பட்டால், வளம்.

Thursday, October 9, 2008

நான் ரசித்த பாடல்: துர்கா விஸ்வநாத்



http://www.durgaviswanath.com/v2-img/home-01bw.jpgதுர்கா விஸ்வநாத்!

சத்தியவான் சாவித்திரி

இன்று நடிகர் ரமேஷ் அரவிந்த் (நிஜ பெயர்) மீட் செய்தேன்.

அவரிடம் காமடி செய்த ரோல் எது நன்றாக செய்தீர்கள் என்று கேட்டேன்.

உடனே பதில் வந்தது. சதி லீலாவதி. தமிழ். கமல் கலக்கியிருப்பார். எனக்கு பிடித்தது கோவை சரளா செய்யும் டைமிங், கட்டு கத்தல் வேற....கன்னடத்தில் ராமா ஷாமா பாமா வந்தது. கமலும் மங்களூர் கன்னடா (மலையாள, ஸமஸ்கிரது மிக்ஸ் ஏசி) நடித்தது...வெள்ளி விழா படம். அவர் தான் டைரக்ட் செய்தார். விழா மேடையில் அவர் உட்காரவில்லை. தமிழர் என்பதால். அப்போது காவிரி பிரசனை.

சந்திரமுகி செய்த போது, விழாவின் போது பி.வாசுவும் இப்படி தான்.

கன்னட நடிகர்களில் ஹீரோ கணேஷ் நன்றாக காமடி செய்கிறார் என்றார். அவருடைய மூங்காறு மாலே ( கோடை / மான்சூன் மழை? ) படம் ஒரு சூபர்ஹிட் என்றார். எவ்வளவு ஒற்றுமை.

சரி இன்னொரு காமெடி சொல்லுங்கள் என்றேன். சாத்தியவான் சாவித்திரி, டைரக்டர்
அஜதா சத்ரு படம் என்றார். பெரிய ஹிட். மூன்று வருடம் முன்ன வந்தது. யாருங்க அவர் பேரு வித்தியாசமா இருக்கு என்றேன். "நான் தான்" என்றார். "ஒரு கன்னட டச், சிறு வயது முதல்". என் இரண்டாவது டைரக்சன். நல்ல மனிதர். ஒரு சிறு குழந்தை வைத்திருந்தார் அவர் மனைவி. ரமேஷ் அரவிந்த் என் வயது இருக்கலாம். மேற்கொண்டு கேட்கவில்லை.

அப்புறம் அவர் ஆக்சிடான்ட் படம் பற்றி கேட்டேன். என் பெங்கால் நண்பர்அவரோடு திரைக்கதை அமைத்தது. சுமாராக போயிற்று என்றார். தமிழில்அதை எடுக்க முயற்சி செய்யலாம் என்றார். மூலம் ஹாரிசன் போர்ட் நடித்த படம். 1999 வந்தது. Random Hearts. ஒரு பெண் பார்வையில்.... இவர் ஆண் பார்வையில்... அவளளவு தான், கன்னடபடுத்தி.. ஹீரோ ஒரு ரேடியோ ஜாக்கி. சுடும் போது ஹீரோ ஹீரோயின் தொழில் மாறும். மனைவி இறந்து விட, அதுவும் கூட வேலை செய்யும் தோழனோடு... அப்புறம் the யூசுவல் ...ஆனால் ஒன் லைன் 'நீதிக்கு தலைவணங்கு' போல இருக்கும் என்றார். த்ரில்லேர்? யாராவது சொல்லுங்கள்.

அவர் தமிழ் சரியாக படிக்க மாட்டாரம்... ப்லோக் எல்லாம் ஆங்கிலம் தான்.

ஹீரா போன்ற நடிகைகள் அவரை தமிழில் இருந்து துரத்தி விட்டனர். கடைசி படம் பஞ்ச தந்திரம். அப்புறம் அதே சமயத்தில் மும்பை எக்ஸ்பிரஸ்.

அப்புறம் ஒரு கொசுறு நியூஸ். இவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மகன் ஒருவரோடு படித்தவர்.

அப்புறம் எங்க வம்ச கதை படத்தில், கமல் மீண்டும் நடிக்க அழைத்துள்ளார். (மர்மயோகி)

*****

இன்னைக்கு ஆர்த்தி கதை தட்டனும். வேலை மோக களியாட்டம். ப்லோக் உலகம் எல்லாம் சைலன்ட். வாசகர் குறைவு. ஆயுத பூஜை லீவு ... அதான். திங்கள் முதல் மீண்டும் கும்மிதொடரும்... அப்படியா?

அப்புறம் எங்கள் ஊர் (கல்கத்தா) துர்க்கா பூஜா இன்று. ரொம்ப மிஸ் செய்கிறேன். அது தான் கெஞ்சி கேட்டு பூரி டிபன்.

மனைவி பூரி சுட்டுள்ளார். நேற்றைய சுண்டல், உருமாறி இப்போது காபூலி சன்னாவாக உருபெற்று தட்டில் காத்துக்கொண்டு உள்ளது.

ஆறு சின்ன பூரி போதும். நூறு கிலோ எடை தொட்டு விட்டேன். பயம்.

நான் என்னை கண்டிக்கிறேன்

இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி இருக்கு, ப்லாகர் அலம்பல்.

ஒவ்வொருததுரம் அவரை இவரை கண்டிப்பது.

இன்னைக்கு கொஞ்சம் வேலை பிசி. (ப்லோக் எழுதறதை விட்டுட்டு எதுக்கு?)

அதுக்காக என்னை 'நான் என்னை கண்டிக்கிறேன்!'

கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !

லக்கிலுக்கை கண்டிக்கிறேன்!

ஆஸ்திரேலிய அணியைக் கண்டிக்கிறேன் ...

குசும்பணை கண்டிக்கிறேன்.

ஜோக் தான். நல்லா தான் இருக்கு.

- எழுத்தாளர் ரமேஷ்

எழுத்தாளர்

எழுத்தாளர் ஆக ஆசைபட்டேன்
மன வலிமை இல்லை

குடும்ப சூழ்நிலை
கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை

வேலை செய்தேன் காசு வந்தது
குடும்பத்தில் திருப்தி இருந்திச்சு

பாடகரா வருவதற்கு குரல்
ராகம் நுணுக்கம் வேண்டும்

கொடுத்து வைத்தது அவ்வளவு
தான் என்று தொண்டை கட்டிச்சு

ப்லோக் எழுதுறது ரொம்ப
ரொம்ப நல்லா இருந்துச்சு

இப்போ நான் எழுத்தாளர்
ஆயிட்டேன் ரொம்ப நல்லா இருக்கு!

பிழைகள்

நேற்று ஆயுத பூஜை. கம்ப்யுட்டர் அருகே கொஞ்ச நேரம் தான் மனைவி விட்டார்.

தமிழ் தடுமாறுகிறது.

அப்புறம் நான் எழுதும் தமிழ் இன்னும் ஹிந்தி/மராட்டி/பெங்காலி டப்பிங்என்று மனைவி சொல்கிறார். இருந்தாலும் உங்களுக்கு புரிகிறது அல்லவா.

நீங்க நல்ல இருக்கீங்களா? என்பதை தமிழர்கள் நல்லா இருக்கீங்களா, நீங்க என்பார்கள் என்று கேள்விபட்டேன். என் மனைவி என்னோடு எப்போதும் ஒரு ஆங்கில தமிழ் கலவை பேசுவார்.

ஒரு உண்மை, இப்போது எல்லோரும், இங்கிலிசை டப் செய்து தமிழ் பேசுகிறார்கள். நிஜம்.

என் பயன் எப்பவும் இங்கிலீஷ் தான் பேசுகிறான். தமிழ் புரிந்து கொள்கிறான். ஹிந்தி சுத்தம். மகளோடு ஒரு வருடமாக கன்னடம் கொஞ்சம் பேசுகிறான்.

நான் வீட்டிற்குள் மராட்டி நுழைக்கவில்லை.

இன்னைக்கு கொஞ்சம் கதைகள், அப்புறம் சில கவிதைகள் எழுதனும். அப்டேர் the வொர்க்.

Wednesday, October 8, 2008

முடியாத இரவுகள்

இது எனது இருநூறாவது பதிவு.

*************************************

என் பெயர் இந்தியா
விடிந்தால் நான் சுதந்திர நாடு
பிரகடனம் எப்போது?
நடு நிசி என்று சொன்னார்கள்
ஜோசியர்கள் இரவை பிடிக்க
இரவு என்னை நன்றாக பிடிக்க..
நான் சொன்னது
நம் கொடுமை இரவுகள்!
என்று விடியும்?
கொண்டாட்டங்கள் இல்லா
முடியாத இரவுகள்.


(இந்தியாவே கவிதை சொன்னா எப்படின்னு உக்காந்து யோசிச்சேன்...)

ஆப்கானிஸ்தான்

காலித் ஹூசைனி என்பவர் எழுதிய எ தௌசாந்து ச்ப்லேண்டிட் சன்ஸ் என்பது மிகவும் ப்ரிபலம்.


A Thousand Splendid Suns

அதில் எப்படி வார் லார்ட்ஸ் ஆப்கனிஸ்தான் நாட்டை, அதுவும், கொஞ்சம் பெர்சிய, கொஞ்சம் மேற்கு பலுசிஸ்தான் மற்றும் கால் வாசி தஜிகிஸ்தான்கொண்டு உருவாகியது... ஆப்கானி மொழி தஜிகி தான். நூறு வார்லார்ட்ஸ் சேர்ந்து உருவாக்கியது... ஆயிரம் வார்லார்ட்ஸ் ஆக இப்போது வலுபெற்று உள்ளது. குட்டி பெரிய தாதாகள்.

அமெரிக்காவிற்கு எங்கோ அது பிடிக்கவில்லை. ஆயில் வேற அங்கு உள்ளது. போர் போட வேண்டும். நாட்டை பிடித்து விட வேண்டும்.

மழையும் மலை சார்ந்த் பிரதேசம். வார்லார்ட்ஸ் அங்கு இருந்து மறைந்து விடுவார்கள். பின் தோன்றுவார்கள்.

தியான பூமி. புத்த பிட்சுகள் அங்கு தான் சென்றார்கள்.

ஈபடியாக பின் லாடேன் தன் குழுவோடு சூடானில் இருந்து வந்து அங்கே முல்லா ஊமருடன் தங்கி விட்டான். இப்போது அவர்கள் பாகிஸ்தானில்இருப்பாதாக கேள்வி. அதனால் தான் புஷ் அங்கு குண்டு போடுகிறார்.

வித்தியாசங்கள், இந்தியாவை பார்க்கும் போது. புத்திசாலிகள். அதி.

கொங்கு நாடு

கொங்கு நாடு என்பது மேற்கு கங்கா வம்ச அரசர்கள் ஆண்ட பூமி. காலம் கி.பி. 350 முதல் 529.

கிழக்கு கர்நாடகாவும், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் சேர்ந்தது. அந்தகாலத்தில் இந்த ஏரியா புளியும் புலியும் பிரபலமாம். நிறைய பெண்கள் தான் ஆட்சி பண்ணி இருக்காங்க. அரசர்கள் எல்லாம் கூத்தடிசாங்க.

அனால் பேச்சு மொழி
கன்னடம் , தெலுங்கு மற்றும் தமிழ் தான்.

கொஞ்சம் மலையாளம் உண்டு மங்களூர் ராஜாங்கம்.

வடக்கு
கர்நாடகாவை ஆண்டவர்கள் போசலேக்கள். இந்தப்பக்கம் சாளுக்கியர்கள்.

கண்டராவரசி புகழ் வட்டாள் நாகராஜ் இதை தான் குறிப்பிடுகிறார். (ஆமாங்க, அவர் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி போய் பார்த்தார்!)
உக்காந்து யோசிபாங்களோ?

ரொம்ப கஷ்டமுங்க. ஆகா மொத்தம் தமிழ்நாடு தான் அந்த காலத்தில் மிகபெரிய நாடு. எல்லோரும் வந்து கொஞ்சம் போர் பண்ணி, ஆழ பார்த்தார்கள்.

அப்புறம் குறு நில மன்னர்கள், டிஸ்ட்ரிக்ட் லெவல் மற்றும் ஜமீன்தார்கள்.

எங்க தாத்தாவுக்கு தாத்தா அவுரங்காபாத் அருகே ஒரு ஜமிந்தாராம். சிவசுந்தரராவ். எங்க தாத்தா ஒரு முறை சொல்லி இருக்கார். சைவ சித்தாந்த விற்பன்னர். அவர்களுக்கு கங்கா வம்சதின ராஜாக்கள் தான் இடம், நிலம் கொடுத்தார்களாம். கொல்ஹபுர் அருகில் இன்னும் ஆயிரம் வருஷத்திய கோவில் உண்டு.

பிறகு ப்ரிடிஷ்காரனுக்கு
டாக்ஸ் கட்டாதனாலே, ஜாமீன் டேக் ஓவர் பண்ணினாங்களாம். அப்புறம் காடுகளில் மாடு மேச்சி ஒரு பெரிய வம்சம் உண்டு பண்ணியிருக்காங்க.

அப்படி வந்த கங்கா வம்ச கதை தான் மர்மயோகியில் கமல் எடுக்கிறாராம். எங்க தாத்தா கனவில் வந்து சொன்னார். இந்த ராஜ கதை தான் நானும் ஒரு நாள் படமா எடுக்க போறேன்.

இது ஒரு வரலாற்று ஆவணம்.

ரஜினி நியூஸ்


செம தமாஸ் - கிளிக் பண்ணி பாருங்க.


அப்புறம் எந்திரன் படம்