Saturday, May 9, 2009

சங்கமத்தில் பேருந்து போட்டி

நண்பர் விஜயின் வலைத்தளத்தில் தான் இந்த "பேருந்து" போட்டி குறித்து தெரிந்துக்கொண்டேன்.

இங்கே இருக்குது சங்கமம்.

சங்கமம்

அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

( நான் எப்போதும் போல கலந்துக்கலே... :-) )

Wednesday, May 6, 2009

அமெரிக்காவில் அம்பி

அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !

வினவு தளத்தில் அந்த பதிவு வந்துள்ளது. நன்றாக எழுதியுள்ளார்.

( என் சொந்த வாழ்க்கையில் அது தலைகீழ், என் மனைவி சோ கால்டு பிராமின்ஸ் )

poonol


சரி இந்த சாதி பிரச்சனைக்கு என்ன தீர்வு....

முதலில் சாதி / மதம் என்ற காலத்தை ஸ்கூல் அட்மிசனில் இருந்து எடுக்க வேண்டும். சாதி கோட்டாக்களை கட் செய்ய வேண்டும். சாதி பெயரைச்சொல்லி யாரும் பயன் பெறக்கூடாது… ரமேஷ்

Tuesday, May 5, 2009

டா வின்சி இந்தியரா?



டா வின்சி இந்தியரா? இந்த படம் சொல்லும் உண்மை என்ன? நீங்களே பாருங்கள்...

Monday, May 4, 2009

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அனைவருக்கும் கொண்டாட்டம்

அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள்
அகில உலகிலும் பட்டையை கிளப்பும்

அரசாங்கம் கோட்டை விட்டு
அல்லும் பகலும் கரண்டிர்க்கும் அலையும்

அக்னி நட்சத்திரம் முடியும் நேரம்
அலைபாயும் மழை வரும்

அனைவரின் நெஞ்சத்தில் புது
அரசாங்கம் ஆட்சி அமைக்கும்

அன்பான தேசமிது திருடர்களையும்
அரவணைத்து பதவி தரும்!

முரண் தொடை எழுத்துக்கள்

முரண் தொடை எழுத்துக்கள் வாசிக்க சுவாரசியமாக உள்ளன.


இங்கே படியுங்கள்....

அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவது தவறா?


அவரை எங்கே பிடித்தேன்? யாரோ ஒருவரின் பதிவில், அவர் பெரிய ஆராய்ச்சி பின்னூட்டம் போட்டிருந்தார்!

Thursday, April 30, 2009

கோவேரி கழுதையில் இந்தியா தேர்தல்

படம் பார்த்து புரிந்து கொள்க...




கிள்ளம்கொட்டா, வைசாக் அருகில் (மாவோவிச்டுகள் அதிகம் இங்கு...)

அப்புறம் ஒரு வோட்டு இருக்கும் பூத்து ( ஒரு பத்து பேர் பனி செய்ய வேண்டும் அதற்கு ). குஜராத்தில். கிர் காட்டின் உள்ளே ஒரு கோவில் பூஜாரிக்காக ( அங்கேயே வாழ்பவர்).

Wednesday, April 29, 2009

கார்காலம்

கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்

வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்

மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்

கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை

ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்

சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்

இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!

Friday, April 24, 2009

இலவசம் பிரிடன் கம்பெனியில் 100 ஷேர்கள்

இது நிஜம் என்று நம்பலாம், எனத் தோன்றுது.

ஒரு சோசியல் நெட்வர்க் கம்பனி விளம்பரம், என் நண்பர் விஜய் ப்ளோகில் பார்த்தேன்.

என் ஈமெயில் விவரம் (காசு இல்லை) மட்டும் கொடுத்தேன்.... அவ்வளவு தான்.

அதன் மூலம், இலவசமாக சில ஆயிரம் ஷேர்கள் கிடைத்தன. 2012 வாக்கில் அது ஒன்று கிட்டத்தட்ட ஒரு டாலர் அளவு ஆகுமாம் (நம்பிக்கை தான்). ஆஹா!

நீங்களும் ஷேர்கள் இலவசமாக பெற இங்கே க்ளிக்குங்கள்.

Free 100 shares on me2everyone.com

Thursday, April 23, 2009

தனி நபர் தாக்குதல்

பதிவுலகில் தனி நபர் தாக்குதல் அதிகம் ஆகிவிட்டது என்று நண்பர் வெங்கட் கிருஷ்ணா எழுதுகிறார். உண்மை. மிக மிக உண்மை. ஜாதி மதம் குலம் கோத்திரம் பார்த்து எழுதுவதில்லை பதிவர்கள்.

சில பதிப்பகங்கள் ஜாதி பார்த்து தான் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது, என்கிறார் ஒரு நண்பர். சரியா தவறா தெரியவில்லை.

சரத்பாபு தேர்தலில் நிற்பது தவறாம். என்ன கொடுமை? :-(

சென்ற தேர்தலில் ஐ.ஐ.டி. கட்சி ஒன்று இருந்ததே. அப்போதே எங்கே போயிற்று இந்த பதிவர்கள் புத்தி?

அய்யா, எழுதுவதற்கு பேனாவும், கி போர்டும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நல்லா போதை வேண்டும். உண்மை நிலை வேண்டும். பேச்சு துணிவு வேண்டும்.

********

சில எழுத்தாளர்கள், திருத்தவே முடியாது. அவர்கள் எழுதுவது ஜனரஞ்சகமாக இருப்பதால் தான் (படித்தால் புரியும் விதம், ஆர்வத்தை தூண்டும் நிலைமை) அவர்களுக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்குது. அதை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல காசு காசு என வேண்டுவது தேவையற்ற ஒன்று.

கொடுத்தாலும் நன்றி தெரிவிப்பதில்லை.

எழுதுங்கள் , நன்றாக எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

Sunday, April 19, 2009

சோகம்

கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்

இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை

பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்

கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!