ரசனையில்லாத படம். நான் கோவையில் சென்ற வாரம் பார்த்தது. எழுத இப்போ தான் டைம் கிடைத்தது. உடனே எழுத அப்பா ஒன்றும் பெரிய பிஸ்தா படம் இல்லை...
என்னமோ தெரியலே, காக்க காக்க எடுத்த ஆளா இவர் என்று சொல்ல வைக்கிறார், கவ்தம்.
பாடல்கள் கேட்கும் விதம். சுதா ரகுநாதன் வருகிறார், பாம்பே ஜெயஸ்ரீக்கு... ஹாரிஸ் ஜெயராஜ், ஏசுநாதர் பாடல் மாதிரி செய்திருக்கிறார். அல்லேலூயா.
அதுவும் அரசியல் கூட்டணியோடு ரிலீஸ் செய்துள்ளார், மு.க.அழகிரி மகன். சொல்ல வேண்டுமா, எப்படி தியேட்டரில் ஓட்ட வைப்பார்கள் என்று?
இது கமல் நடித்திருக்க வேண்டிய கதை. சூர்யா மாதிரி ஒரு மட்டமான வேஸ்ட் நடிகர் எனக்கு தெரியவில்லை. அவர் தம்பி பரவாயில்லை.
அமேரிக்கா மோகம், கட்டாயம் சூட்டிங் செய்ய வசதி... காசு பணம் இப்படி நடுத்தர வர்க்கம்...
இது பாரஸ்ட் கம்ப்பின் ஆப்சூட்... அப்பா சூர்யா தான் தம் ஹாங்க்ஸ் செய்த கேரக்டர்... பப்பா யார்... இன்னும் தெரியவில்லை புரியவில்லை... சிம்ரன் அருமை.... எனக்கு அவர் இன்னும் ஹீரோயின் தான். குழப்பமான கதை அமைப்பு.
படம் டப்பா. ப்ளீஸ் கவ்தம், விட்ருங்க. ஐ.டி. ஜாபுக்கு போங்க. யு.எஸ். உங்களை வரவேற்கிறது. நான் படம் எடுக்கிறேன்...
குழந்தைகளும் வந்திருந்தார்கள், எல்லாம் ஏ.சி. தியேட்டரில் குறட்டை விட்டு தூங்கியது அருமை.... காட்சி!
என்ன இந்த படம் பார்த்தால், எனக்கு கோவை அன்னபூர்னாவில் (ஆர்.எஸ்.புரம்) ஒரு கட்டு கட்டு , வெட்டு வெட்ட முடிந்தது, நல்ல டிபன். ரோஸ்ட். சேவை. புரோட்டா. ரோஸ் மில்க். ஹி ஹி ....
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
1 comment:
என்னை பொறுத்தவரை கமல் தசாவதாரத்தில் நடித்திருந்ததை விட த நன்றாகவே சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தார்,
ஒப்பனை என்ற பெயரில் யானை தலை போல வைத்துக்கொண்டு எதுவும் செய்யாம, உடல் மொழியில் நன்றாக நடித்துள்ளார்,
என்ன படம் பார்க்கும்போது அப்பா பாசம் வரும் என்று சொன்னதெல்லாம் நடக்க வில்லை ஆனாலும் படம் நன்றாகவே வந்துள்ளது.
தாங்கள் சொல்லும் அளவிற்கு படம் ஒன்றும் மோசமில்லை
Post a Comment