Wednesday, October 8, 2008

பிரா திருடன்

பிரா திருடன் சில பேர் மூளை எப்படயோ வேலை செய்யும்.

(நியூ யார்க்கில் நான் வேலை செஞ்சப்போ, என் ரூம் மேட் ஒருத்தியோட ப்ராவெல்லாம் ஒரு லாண்டரியிலே எவனோ சுட்டுட்டான். பரிதாபம். அங்கே லாண்டரி மிசின் கடையிலே இருக்கும். இல்லே அபர்த்மண்டுக்கு மொத்தமா ஒரு இடத்தில் இருக்கும்.)

பரா போட்டோஸ் தேடினேன்... இந்த நியூஸ் கண்ணில் பட்டது.

Carmen Kontur-Gronquist

இந்த போட்டோவில் இருக்கும் பெண், ஒருமேயர்.

தமாசுக்கு இப்படி மை ஸ்பேசில் போட்டோபோட்டாரம்.

வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

- கார்மன் கொண்டூர்

இவீங்க இம்சை தாங்க முடியலீங்க!

தற்கொலை

தற்கொலை ஒன்றும் முடிவல்ல.. கடைசி வரை வாழ்ந்து பார்ப்பது தான் மனிதன் சவால்.

அமெரிக்காவில் ஒரு இந்தியர். இப்படி செய்தது ஞாயமா? சூன்யம்.

திவ்யாவின் பதிவு... அமெரிக்கா குடும்பம் சோகம்

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை!

என் அக்காவும் பரிதாப பட்டார்.

சில சமயம் சில நிகழ்வுகள்.

Tuesday, October 7, 2008

ஆயுத பூஜையும் மூட நம்பிக்கையும்

நாம் தொழில் செய்யும் ஆயதங்களை நம்புவோம். ஆனால் ரெகுலராக சர்விஸ் செய்வோம்.

அமெரிக்காவில் டேலைட் சேவிங்க்ஸ் டைம் வரும் போது தானாக வீட்டில் பயர் அலாரம் பேட்டரி மாற்றுவார்கள்.

ஆயுத பூஜை மட்டும் செய்தால், சர்விஸ் வேண்டாம் என்று நினைக்கவேண்டாம்.

சாமியும் கும்பிடுங்கள். சர்விசும் செய்யுங்கள்.

மூட நம்பிக்கை.

அது விவேக் சொன்ன எழுநூற்றி சொச்சம் ஸ்பேர் பார்ட்சில் ஓடாத வண்டியா ஒரு எலுமிச்சங்காயினாலே ஓடுது? (அந்த எலுமிச்சை ஆடுறதை பார்த்து ரோடில் நிற்கும் மிருகங்கள் ஓடிவிடும் என்றும் சொல்வார்கள்!)

சிந்தித்து பாருங்கள்.

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
!

தமிழர் பார்வை, ஒரு அழகான பதிவு

கரிகாலன் அவர்கள் தமிழர் பார்வையில் எழுதுகிறார். வாசியுங்கள் .

மிகவும் நன்றாக எழுதறீங்க.

அய்யா பெரியாரின் அகண்ட தமிழ்நாடு விருப்பம் பற்றி நீங்கள் எதாவது சொல்லுங்கள்.

He wanted all Tamils under one umbrella and rule. Please check with Suba.Veerapandian.

I feel the self rule with dignity is the best option, provided there is truce all over. Norway is working very hard.

Could you please detail out all the Tamil political democratic parties that are working (or earlier) in SriLanka for this. Would caste or religion be a matter of principle there?

நீங்கள் இப்போது அங்கு உள்ள நிலைமை குறித்து புகைப்படம் (கோகோ கோலா ஸ்பான்சர்து கேம்ஸ் எல்லாம் வேண்டாம்) போடுங்கள்.

நன்றிகள்.

சவ்ரவ் கங்குலி தாதா ஓய்வு : உலக கிரிக்கட்

எனக்கு கிரிக்கட் விட பூட்பால் கால்பந்து தான் அதிகம் பிடிக்கும். பர்சனல் சாய்ஸ். ஆண்மையான குறுகிய கால விளையாட்டு. முரட்டுத்தனம்.

இன்றைய ரிப்போர்ட்....
உலக கிரிக்கட் : கங்குலி தாதா ஓய்வு - என் மனைவி அவர் பேன். சிறு வயதில் இருந்து கிரிக்கட் ரசிகை!

சவ்ரவ் கங்குலி வாழ்த்துக்கள். (
சவ்ரவ் என்றால் எல்லாம் நிறைந்தவன் என்று பொருள் ). ரொம்ப சவுரியமா இருக்கான்டா.

பெங்காலில் (கல்கத்தா) பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும்.

எங்கள் வீடு அவர் வீட்டு அருகில் தான். பணக்காரர்கள். பிரிண்டிங் பிரஸ். ஒரு ராஜா குடும்பத்து சொந்தம். நிஜமாகவே ராஜா மாதிரி டிரஸ் செய்வார்கள். அவர்கள் இருந்த இடம் பெஹலா.அவர்கள் வீட்டு பக்கத்தில் நல்ல சாட்ஸ் கிடைக்கும். சிறு பயனாக கங்குலியை மிக அருகில் பார்த்த ஞாபகம். அவர் பயின்ற விக்டோரியா ஸ்கூலுக்கு பூட்பால் ஆட செல்வோம். என் அக்காவின் மெடிக்கல் காலேஜ், அவர் படித்த சேவியர் காலேஜ் அருகில்.

அவருடைய அண்ணன் ஸ்நெஹாஸிஸ் என் வயது. எதோ ஓர்
பூட்பால் மாட்ச் சேவியர் காலேஜ் கிரௌண்டில் ஆடியதாக நினைவு. கிரிக்கட் பேட்டிங் நடத்தினார் என்று அவர் மீது குற்றசாட்டு இருந்தது என்று என் பெங்கால் போலிஸ் நண்பர் கூறினார். எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ? மீண்டும் ரிஜ்வான் கொலை கேசில் அவருக்கு பெயர் பாதிப்பு. அவர் குடும்பத்திற்கும் காதுலும் ஆகாது. இருந்தாலும் சவ்ரவ் சாதித்தார். சாட் கடைக்காரர் மகளை கை பிடித்தார். அவர் நாட்டியம் ஆடுவார்.

அப்புறம் சவ்ரவ் நக்மா உறவு தமிழ்நாட்டுக்கு தெரியும். காசுள்ளவன் பண்ணும் வேலை. சின்னவீடு.

Certain things are better understood the way it is!

அவர்கள் குடும்பம் துர்கா பூஜாவிற்கு பெரிய பந்தல் அமைக்கும். (நாங்கள் இப்போது பெங்களூரு விஜயா பேங்க் லே அவுட்டில் வைத்துள்ளோம்...). கீழ் ஜாதிக்காரர்கள் போக கூடாது உள்ளே என்பார்கள். பந்தலுக்கு அதிக பணம் கொடுத்தவன் நான் தான். சாமிக்கு ஒக்கே.

முடிவு

முடிவுகள் முடிவாய்
இல்லாத வரை
முடிவு முடிவு தான்.

இதயம்
மூளை
கண்
உடல் உறுப்புக்கள்
முடிவுள்ளவை...

மனதிற்கு மட்டும்
முடிவு கிடையாது!


( inspired by the recent organ donor episodes )

டர்கி நடிகை பாடகி : செர்டப் எறேனேர்

பிரிட்னி ஸ்பியர்ஸ் விட நல்லா இருக்கு... நல்ல பாடகி... நடிகை...

செர்டப் எறேனேர்

கொஞ்சம் அரேபியா வகை ராய், மையா மையா மாதிரி...

ஒன்று




இன்னொன்று

மொய்

கல்யாண பந்தல்
உறவுகள்
உணவு
உபசரிப்பு
கடைசியில்...
மொய் அங்க எழுதிருங்க...

திருந்த மாட்டார்கள்
பண்பாட்டு
குசும்பர்கள்!

டாடா நானோ குஜராத்தில் தயாரிப்பு...

டாடா நானோ குஜராத்தில் தயாரிப்பு...



நல்ல முடிவு.

வெஸ்ட் பெங்கால் ஏனுங்க இப்படி பண்ணுனீங்க? அவுட் பிரகாஸ் கரட்.

இதுக்கும் திரிணமூல் பி.ஜ.பி. கவர்மன்ட் சப்போர்ட் பண்ணிச்சு!

ஒருத்தன் தோத்தா தான், ஒருத்தன் ஜெயிக்க முடியும்...

பரிசல்காரனின் சிறப்புப் பார்வை : அபியும் நானும்

அபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை very nicely written....



But you missed telling where it was suttufied... அனுபம் கேர் 'டாடி' தானே இது?

காசு (99 ரூபாய்கள்) கொடுத்து சி.டி. வாங்க சொல்றார்... பிரீபீஸ் நல்லா இருக்காம்.

காசு கொடுத்து? What are you talking.. High speed Download இருக்கு நம்ம கைய்ல!

Net -> PC -> Laptop -> (friends) -> Ipod (small, big)... -> burn a CD for backup.

இப்படி போகுது லைப்!

ராதா மோகன் கவலை பட வேண்டாம். என்னோட கதை ஒன்னை சுடாம இருந்தா சரி. சுட்டாலும், காசு கொடுத்துடுங்க. 99 வேற... லட்சம் வேற. (அந்நியன் டயலாக் அஞ்சு பைசா அஞ்சு பேர் அஞ்சு வருஷம்.. வேண்டாம்...)

அவர் 'மொழி' ஒரு தெலுங்கு படத்திலே...பேர் மறந்திடுச்சு.. ஒன் லைன் சுட்டு.. அதாவது.. கதை வந்து... ஒரு சின்ன ஊமை பொண்ணு அக்கா கிட்டே உலகம் எப்படி சத்தம் வருதுன்னு கேட்பாங்க... அதை அந்த அக்கா எக்ஸ்ப்ளைன் பண்றது.. அழுகை வரும்.. பேபி ஷாலினி மாதிரி யாரோ நடிச்ச படம்... verybeautiful movie...