Monday, March 30, 2009

தமிழ்நாட்டில் பா.ம.க

தமிழ்நாட்டில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் ஐந்து - தி.மு.கவுடன் நேரடி மோதல்...., மற்றொண்டு விடுதலை சிறுத்தைகளுடன் மோதல், புதுச்சேரி தவிர. (இது எனது பா.ம.க தேர்தல் குறித்து ஐந்தாவது பதிவு!)

நான்கு எம்.பி. தொகுதிகள் மட்டும், பா.ம.க கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. ஜெயித்தால் கட்சி வளர்க்க காய் நகர்த்தும் விதம், மற்றும் அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்மூனிஸ்ட் கூட்டணி வோட்டுக்கள் விழும் என்ற தையிரியம்!

இது வரை அவர்கள் பத்து தொகுதிகளில் , சுமார் 40% வோட்டுக்கள் இருக்கும் விதமாக போட்டியிட்டுள்ளனர். நல்ல எதிர்பார்ப்பு!

கிழே எம்.பி. தொகுதிகளும், அவற்றின் உள் அடக்கிய சட்டசபை தொகுதிகளும்...

ஸ்ரீபெரும்புதூர்

1. மதுரவாயல்,
2. அம்பத்தூர்,
3. ஆலந்தூர்,
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி),
5. பல்லாவரம்,
6. தாம்பரம்.

அரக்கோணம் (மீண்டும் பா..)

1. திருத்தணி,
2. அரக்கோணம் (தனி),
3. சோளிங்கர்,
4. காட்பாடி,
5. ராணிப்பேட்டை,
6. ஆர்க்காடு

தர்மபுரி (மீண்டும் பா..)

1. பாலக்கோடு,
2. பெண்ணாகரம்,
3. தர்மபுரி,
4. பாப்பிரெட்டிபட்டி,
5. அரூர் (தனி),
6. மேட்டூர்.

இது பா.ம.க கோட்டை. சுமார் 30% வோட்டுக்கள் வன்னியர்களின் கையில்.


திருவண்ணாமலை

1. ஜோலார்பேட்டை, (முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதி)
2. திருப்பத்தூர்,
3. செங்கம் (தனி),
4. திருவண்ணாமலை,
5. கீழ் பெண்ணாத்தூர்,
6. கலசப்பாக்கம்.



கள்ளக்குறிச்சி

1. ரிஷிவந்தியம்,
2. சங்கராபுரம்,
3. கள்ளக்குறிச்சி (தனி),
4. கங்கவல்லி (தனி),
5. ஆத்தூர் (தனி),
6. ஏற்காடு (தனி-ப.கு).


இது எம்.ஜி.ஆர் கோட்டை. ஆதி திராவிட மக்கள் அதிகம் இருக்கும் பகுதி. சுமார் 40% வோட்டுக்கள் அ.தி.மு.க வசம். தே.மு.தி.க, கொஞ்சம் ஜாஸ்தி வோட்டுக்கள் வாங்கி ஏரியா.


சிதம்பரம்(தனி) (மீண்டும் பா..)

1. குன்னம்,
2. அரியலூர்,
3. ஜெயங்கொண்டம்,
4. புவனகிரி,
5. சிதம்பரம்,
6. காட்டுமன்னார்கோயில் (தனி).


புதுச்சேரி (மீண்டும் பா.ம.க) காங்கிரஸ் நேரடி மோதல்

யாராவது, தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடப்பட்ட சட்டசபை தொகுதிகள் பற்றி கட்சி வாரியாக பெற்ற வோட்டுக்களை கமன்ட்சில் போட முடியமா?

No comments: